×

கேரளாவில்ரூ.12,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: பாகிஸ்தானியர் ஒருவர் கைது

புதுடெல்லி: கேரள மாநிலம் கொச்சியில் ரூ.12,000 கோடி மதிப்புடைய 2,500 கிலோ போதைப்பொருளை கடற்படையினர் பறிமுதல் செய்தனர். பாகிஸ்தான் மற்றும் ஈரான் கடற்கரையில் இருந்து கேரள மாநிலம் கொச்சியி வழியாக போதைப்பொருள் கடத்தப்படுவதாக கடற்படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து கேரள மாநிலம் கொச்சியின் மேற்கு கடற்கரையில் சந்தேகத்துக்குரிய ஒரு படகை பிடித்து சோதனையிட்ட கடற்படையினர், அதில் 134 சாக்கு மூட்டைகளில் மெத்தாம்பைட்டமைன் என்ற போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது.

மொத்தம் 2500 கிலோ இருந்தது. இதன் மதிப்பு ரூ.12 ஆயிரம் கோடி ஆகும். கேரள மாநிலம் கொச்சியில் உள்ள மட்டஞ்சேரி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு போதைப்பொருள் கட்டுப்பாட்டு பணியகத்திடம் ஒப்படைக்கப்பட்டது. இதுதொடர்பாக சந்தேகத்தின் அடிப்படையில் பாகிஸ்தானியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

The post கேரளாவில்ரூ.12,000 கோடி போதைப்பொருள் பறிமுதல்: பாகிஸ்தானியர் ஒருவர் கைது appeared first on Dinakaran.

Tags : New Delhi ,Navy ,Kochi, Kerala ,Pakistan ,Kerala ,Dinakaran ,
× RELATED 6 தமிழக மீனவர்களுடன் ஈரான் மீன்பிடி கப்பல் பறிமுதல்